அசைவ ஆபத்து!

சுமார் இருபது வருடங்களுக்கு முன்புவரை கூட மக்கள் கறிச்சோற்றுக்கு இப்படி ஆலாய்ப்பறந்து பார்த்ததில்லை. இத்தனைக்கும் அப்போது எல்லா வீடுகளிலும் ஆடு, கோழிகள் வளர்ப்பார்கள்…இப்போது போல அப்போது இவற்றுக்கெல்லாம் பெரிய விலை மதிப்பும் கிடையாது… கிராமங்களுக்குச் சென்றால் எல்லா வீடுகளிலும் ஆட்டுப்பட்டி இருக்கும்…கோழிகளை அடைத்து வைக்கும் பெரிய கூடை இருக்கும்…கூலி வேலை செய்பவர்கள் வீடு உட்பட…வேலைக்குச்சென்று வேலை செய்யும் இடங்களிலும் திரும்பும் வழியில் , வேலிகளில் படர்ந்துள்ள கொடிகளை சேகரித்துக்கொண்டே செல்வார்கள் ஆடுகளுக்கு தீவனம் போட. அவர்கள் நினைத்திருந்தால் […]