மாஸ்கோ: கடந்த 1998ல் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 11 நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டத்தை துவக்கின. பூமியில் இருந்து, 400 கி.மீ., துாரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில், உறுப்பு நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்காஸ்மோசின் இயக்குநர் யூரி போரிசோவ், 2024க்குப் பின் சர்வதேச விண்வெளி திட்டத்தில் இருந்து ரஷ்யா வெளியேற முடிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளார். […]