சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தரைக்காற்று சில நேரங்களில் மணிக்கு 20-25 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 30 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் […]