‘புடின் போர்க்குற்றவாளியா? பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்த அமெரிக்கா இப்படிச் சொல்வது மன்னிக்க முடியாதது!’

மாஸ்கோ: ரஷிய அதிபர் புதினை ‘போர்க் குற்றவாளி’ என பைடன் அழைப்பது மன்னிக்கக்கூடிய விஷயமல்ல என்று ரஷியா தெரிவித்துள்ளது. நேற்று புதன்கிழமே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என பகிரங்கமாக அறிவித்தார். இதற்கு ரஷிய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் தனது குண்டுகளால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் […]