கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா…!

 

கத் இந்தப் படத்தில் வடசென்னையைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் சாகசம் செய்யும் இளைஞனாக நடித்துள்ளார். அவரது காதலியாக ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளார். தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தில் அறிமுகமான போது ஐஸ்வர்யா தத்தா மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அடுத்தடுத்து வந்த படங்கள் அதனை பூர்த்தி செய்யவில்லை. அந்தக்குறையை இந்தப் படம் போக்கும்வகையில் சிறப்பான வேடமாம் அவருக்கு.

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் ஃபேவின்ஸ் பால் படத்தை தயாரித்திருக்கிறார். ஆதவ் சசி என்ற புதுமுக நடிகரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளில் இவர் அசத்தியிருப்பதாகவும், தங்கலான் படத்தின் சண்டை இயக்குநர் ஸ்டன்னர் சாம் இந்தச் சண்டைக் காட்சிகளை அமைத்ததாகவும் படக்குழு தெரிவித்தது.

பின்னணி இசைக்கு கார்த்திக் கிருஷ்ணா, பாடல்களுக்கு தரண் குமார் என இரு இசையமைப்பாளர்கள் படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். மொத்தமுள்ள மூன்று பாடல்களில் யோகி பாபு மற்றும் கரடியின் காதல் பாடல் குழந்தைகளை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது. இன்னொன்று மகத், ஐஸ்வர்யா தத்தாவின் காதல் பாடல்.

யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் காமெடிப் பகுதியை கவனிக்க, நிழல்கள் ரவி, கூல் சுரேஷ், ஆதித்யா கதிர், தங்கதுரை ஆகியோர் உடன் நடித்துள்ளனர். படத்தின் பாடல்களை தற்போது வெளியிட்டுள்ளனர். விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கப் போவதாக இயக்குநர் தெரிவித்தார்.

Kettavannu Per Edutha Nallavandaகெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா
Comments (0)
Add Comment