சர்தார் வெற்றி… இயக்குநர் மித்ரனுக்கு சொகுசு கார் பரிசளித்த கார்த்தி!

கார்த்தி நடிப்பில், பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மன்குமார் தயாரிப்பில் உருவான படம் சர்தார். பிஎஸ் மித்ரன் இயக்கிய இந்தப் படம் தீபாவளி அன்று வெளியானது.

கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படம், இந்திய உளவாளி ஒருவரின் கதை. படத்தின் காட்சியமைப்பு, கார்த்தியின் நடிப்பு, பிரமாண்ட தயாரிப்பு காரணமாக நல்ல வரவேற்பைப் பெற்றது சர்தார்.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இயக்குநர் மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன்குமார் சுமார் 78 லட்சம் மதிப்புள்ள டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்த பரிசினை நடிகர் கார்த்தி இயக்குநருக்கு வழங்கினார். விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றி வரிசையில் ஹாட்ரிக் வெற்றியாக இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடதக்கது. சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, அறிவிக்கப்பட்டது ரசிகர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.

karthiPS MithranSardarகார்த்திசர்தார்பிஎஸ் மித்ரன்
Comments (0)
Add Comment