விஜய்யின் பழைய படங்களை மறு வெளியீடு செய்வது தொடர்கிறது. அந்த வரிசையில் இப்போது துப்பாக்கி.

விஜய் படங்களில் செம ஹிட்டடித்த படங்களை மறு வெளியீடு செய்யும் போக்கு கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பித்தது. லியோ படம் வெளியான பிறகு, ஆண்டு இறுதியில் அவரது சச்சின் படத்தை கமலா திரையரங்கம் மறுவெளியீடு செய்தது.

பின்னர் கில்லி படத்தை மறுவெளியீடு செய்தனர். அந்தப் படம் பெரிய வசூலைப் பெற்றது. 50 நாட்களுக்கும் மேல் ஓடிய கில்லி. கிட்டத்தட்ட ரூ 20 கோடிக்கும் மேல் வசூலைப் பெற்றது. மறுவெளியீட்டில் ஒரு படம் இவ்வளவு தொகை குவித்தது, பெரிதாகப் பேசப்பட்டது. தொடர்ந்து போக்கிரி படத்தையும் வெளியிட்டனர்.

இப்போது விஜய் கேரியரில் மிக முக்கிய வெற்றிப் படமாகப் பார்க்கப்படும் துப்பாக்கி படத்தை மறுவெளியீடு செய்கின்றனர். ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாளாகும். அதை முன்னிட்டு, 21-ம் தேதியே துப்பாக்கி படத்தை திரையிடுகின்றனர்.

துப்பாக்கி படத்தை கலைப்புலி எஸ் தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருந்தார். ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். விஜய், காஜல் அகர்வால், விசியுத் ஜம்வால் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் மீண்டும் பெரிய அளவில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது.

கமலா திரையரங்கில் இந்தப் படத்துக்கான அட்வான்ஸ் புக்கிங் இப்போதே ஹவுஸ்ஃபுல் என்று அறிவித்துள்ளனர்.

.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *