: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 60.

முன்னணி நகைச்சுவை நடிகர்கள் சந்தானம், யோகி பாபு l உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.

கடந்த மார்ச் 15ம் தேதி, மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டை தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேஷு அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *