’இறுகப்பற்று’ படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடித்துள்ள புதிய படம் ‘ரெய்டு’. அறிமுக இயக்குநர் கார்த்தி இயக்கும் இப்படத்தில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு நேற்று நவம்பர் 3ம் தேதி வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?

இந்த முன்னோட்டப் படத்தில் போலீஸ் அதிகாரி மற்றும் அதிரடி கேங்க்ஸ்டராக அறிமுகமாகிறார் விக்ரம் பிரபு. நகரில் அராஜகம் செய்யும் ரவுடிகளை துவம்சம் செய்கிறார். துப்பாக்கி, அரிவாள் வெட்டு, குத்து என ட்ரெய்லரிலேயே ரத்தம் தெறிக்கிறது. ரொமான்ஸுக்கு ஸ்ரீதிவ்யா, அனந்திகா என இரு நாயகிகள். ட்ரெய்லரில் வரும் சாம் சிஎஸ்-ன் பின்னணி இசை ஈர்க்கிறது.

அதிரடி சண்டைகள், நாயகியுடன் காதல், உணர்வுப்பூர்வ காட்சிகள் என படம் ஒரு வணிகரீதியான பொழுதுபோக்குப் படம் என்பதை ட்ரெய்லர் காட்டுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *