தென்காசி: சங்கரன்கோவில் அருகேயுள்ள குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் – வெண்ணியார் தம்பதிக்கு ராஜலெட்சுமி (21) என்ற மகளும் உதயஜோதி (19) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மாணவி ராஜலட்சுமி நீட் தேர்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுதி தோல்வி அடைந்ததாகவும் தற்போது 3வது முறையாக நம்பிக்கையுடன் எழுதியுள்ளார் என்றும் தெரிகிறது. இந்த சூழலில் செப்டம்பர் 7 தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்ததை தொடர்ந்து தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் மாணவி ராஜலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எதிர்வரும் நீட் தேர்வு முடிவுகள் காரணமாக சோகமாக இருந்த மாணவி ராஜலட்சுமி விரக்தியில் தாய் தந்தையின் மருத்துவ கனவை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த சேர்ந்தமரம் காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *