மாநிலங்களவை எம்பியாக இசைஞானி இளையராஜா நியமனம்… குவியும் வாழ்த்துகள்!

2

டெல்லி: விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குளில் 12 பேரை மாநிலங்களவைக்கு நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இளையராஜாவின் படைப்புகள் தலைமுறை தலைமுறையாக மக்களைக் கவர்ந்துள்ளன. அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. அவரது வாழ்க்கைப் பயணம் சமமாக ஊக்கமளிக்கிறது. இளையராஜா ஏழ்மையான பின்னணியில் இருந்து உயர்ந்து இவ்வளவு சாதித்துள்ளார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று கூறியுள்ளார்.

விடுகலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.