பெங்களூரு: கன்னட திரை உலகில் பிரபல கதாநாயகனாகத் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளைய மகன். புனித் ராஜ்குமாரை கர்நாடக மக்கள் செல்லமாக ‘அப்பு‘ என்று அழைத்து வருகிறார்கள். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த புனித் ராஜ்குமார்.

உடற்பயிற்சியின் போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சிறப்பான சிகிச்சை அளித்து வருவதாகவும் இப்போது எதுவும் கூற முடியாது, ஐசியுவில் சிகிச்சை தொடர்ந்து வருகிறது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இன்று மாலை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அவரது மறைவு செய்தி அறிந்த ரசிகர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் குவிந்தனர்.

நடிகர் புனித் ராஜ்குமாரின் காலமானார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு நகரில் பாதுகாப்பை அதிகரிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் புனித் ராஜ்குமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *