பாடகர் பம்பா பாக்யா மரணம்!

2

சென்னை: பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49.

ஏ.ஆர்.ரகுமான் இசையில், ‘ராவணன்’ படத்தில் பாடகராக பம்பா பாக்யா அறிமுகமானார். ரஜினிகாந்தின் 2.0 படத்தின் ‘புள்ளினங்காள்’, சர்கார் படத்தின் ‘சிம்ட்டாங்காரன்’, பிகில் படத்தின் ‘காலமே’, என பல ஹிட் பாடல்களைப் பம்பா பாடியுள்ளார்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடலை ஏஆர் ரகுமானுடன் சேர்ந்து பம்பா பாக்யா பாடியுள்ளார். 

பாக்யராஜ் என்ற இயற்பெயர் கொண்டவரை, பிரபல சூபி பாடகர் பாம்பா போலப் பாடச் செய்து அதன் தாக்கத்தில் பாம்பா பாக்யா என்று பெயரையும் சூட்டியவர் ஏஆர் ரகுமான்.

பம்பா பாக்யா மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.