சென்னை: மின்சார கார் மற்றும் இருசக்கர தயாரிப்பில் முன்னோடியாக உள்ள ஓலா நிறுவனத்தின் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஓலா நிறுவனத்தின் மின்சார வாகனங்களில் விற்பனை சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை சரிந்துள்ளது.

மின்சார வாகனங்களில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துக்களால், அவற்றைப் வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக மின்சாரம் ஏற்றும் நேரத்தில் பேட்டரிகள் வெடிப்பது மற்றும் தீப்பிடித்து எரிவது அதிகரித்து வருவது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஓலா நிறுவனத்தினரே வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு ஒரு கோடி வாகனங்களை விற்கத் திட்டமிட்டுள்ள அந்நிறுவனம், தற்போது நாளொன்றுக்கு 130 முதல் 200 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஓலா மின்சார வாகனத் தயாரிப்பு தொழிற்சாலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *