சென்னை: தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மறு உத்தரவு வரும் வரை கலை நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் கூட்டமாக உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது மற்றும் அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *