டெல்லி: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வடக்கு ஆந்திர கடற்பகுதியில் கரையைக் கடந்த நிலையில், கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது..

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு இன்று காலை வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரை ஒட்டி காகிநாடாவில் கரையைக் கடந்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் லோசான மழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், தெலுங்கானாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கர்நாடகாவின் உட்புற பகுதிகள், தெற்கு கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, மராதாவாடா பகுதிகளில் மிகமி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், வடக்கு ஆந்திர பிரதேசம், ராயலசீமா, கர்நாடகாவின் தெற்கு உட்புற பகுதி, தெற்கு ஒடிசா, தெற்கு சத்தீஸ்கர், விதர்பா பகுதிகள் தனித்து விடப்படும் அளவிற்கு மிகமிக கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *