நாகார்ஜூன், கார்த்தி இணைந்து நடித்த ‘தோழா’வை இயக்கிய வம்சி பைடிபள்ளி இந்தப் படத்தை இயக்குகிறார். தெலுங்கு, தமிழில் வெளியாகும் இப்படத்தை தில் ராஜூ, சிரிஷ் இருவரும் தயாரிக்கின்றனர்.

தசரா பூஜையின் ஒரு நாளில், ‘விஜய் 66’ பட பூஜையும் நடக்கிறது. அன்று சென்டிமென்டாக ஒரு காட்சியை மட்டும் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். பின்னர் சென்னை, மற்றும் ஹைதராபாத் தவிர, வெளிநாட்டிலும் படமாக்க உள்ளனர். இந்தாண்டு நவம்பருக்குள் ‘பீஸ்ட்’டை முழுவதும் முடித்து கொடுத்துவிடும் விஜய், பிப்ரவரியில் இதன் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்.

படத்தின் நாயகி உள்ளிட்ட மற்ற குழுவினர் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடவிருப்பதாக படத்தைத் தயாரிக்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *