கொடை இசை வெளியீட்டு விழா

1

கொடை படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

5 பாடல்கள் கொண்ட இந்த படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா புதன்கிழமை நடந்தது.

இவ்விழாவில் இசையமைப்பாளர் சுபாஷ் கவி பேசுகையில், “இந்த படத்தில் அதிகபட்சமாக லைவ் சவுண்ட்தான் பயன்படுத்தி இருக்கிறோம். தமிழில் இதுவரை பணிபுரிந்த பல மூத்த இசை கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். படத்தின் பாடல் வரிகளை எழுதியவர்களுக்கும், பாடலை பாடியவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்,” என்றார்.

நடிகர் கார்த்திக் சிங்கா பேசுகையில், “இசையமைப்பாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. அனுபவம் மிக்கவர் போல இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னை இதில் நடிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார், அது எனக்கு உத்வேகத்தை கொடுத்தது. இந்த படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். படத்தில் எல்லா வித அம்சங்களும் இருக்கிறது. படம் மிக நன்றாக வந்துள்ளது,” என்றார்.

நடிகை அனயா கூறுகையில், “தமிழில் இது என் முதல் படம். நான் இந்த திரைப்படம் மூலமாக நிறைய கற்றுகொண்டேன். கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி,” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவியின் பேச்சு:

“இசையமைப்பாளருக்கு முதல் படம் போன்று தெரியவில்லை, அவருடைய இசை ஈர்க்கும்படி உள்ளது. இளைஞர்கள் திரைத்துறைக்கு வந்து ஜெயிக்க வேண்டும். இந்த படத்தின் கதாநாயகன் சிறப்பாக நடித்துள்ளார், ரோபோ சங்கர் மிகச்சிறந்த கலைஞன், அவன் பெரிய ஆளாக வரவேண்டும். சிங்கமுத்து என் குடும்பத்தில் ஒருத்தன் அவன் மகன் நடிகனாகியிருப்பது மகிழ்ச்சி. என் குடும்பத்திலிருந்து யாரும் நடிக்க வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். வாரிசுகள் சினிமாவிற்கு வந்தால்தான் நம் பெயர் நிலைக்கும். நாயகனுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்த படத்திற்கு உங்களது ஆதரவை கொடுத்து, படத்தை வெற்றி பெற வையுங்கள்.”

தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில், “படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமையாக இருந்தது. இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துகள். கொடை என்ற டைட்டிலே நன்றாக இருக்கிறது, இந்த காலத்தில் யாரும் தமிழில் நல்ல டைட்டில் வைப்பதில்லை, படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். இயக்குனருடைய பணி சிறப்பாக வந்துள்ளது என்பது படத்தின் காட்சிகளை பார்த்தாலே தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடையும்,” என்றார்.

நடிகர்கள் எம்எஸ் பாஸ்கர், ரோபோ சங்கர், தயாரிப்பாளர் டி சிவா, இயக்குநர் எஸ் எழில் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

இயக்குநர் ராஜா செல்வம் நன்றி கூறினார்.

கொடை தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்:

தயாரிப்பு நிறுவனம்: எஸ்எஸ் பிக்சர்ஸ்
எழுத்து இயக்கம் : ராஜா செல்வம்
இசை: சுபாஷ் கவி
ஒளிப்பதிவு: அர்ஜுனன் கார்த்திக்
எடிட்டர்: ஜி சசிகுமார்
கலை: கேஎம் நந்தகுமார்
நடனம்: தினேஷ், ராதிகா
சண்டைக்காட்சிகள்: பீனிக்ஸ் பிரபு ஆடைகள்: பி ரெங்கசாமி
ஒப்பனை: பிஎஸ் குப்புசாமி
ஸ்டில்ஸ்: மோகன்
மக்கள் தொடர்பு – சதீஷ் AIM