முதல் முறையாக ஐரோப்பாவில் 28 நாடுகளில் வெளியாகும் கேஜிஎஃப் 2!

 

ரோப்பா கண்டத்தில் 28க்கும் அதிகமான நாடுகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் கேஜிஎஃப் 2.

யஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள கேஜிஎஃப் 2 படம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி உலகெங்கும் வெளியாகும் கேஜிஎஃப் 2, வெளயீட்டுக்கு முன்பே பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.

இதுவரை தமிழ், கன்னடப் படங்கள் வெளியாகாத நாடுகளில் கூட முதல் முறைாக கேஜிஎஃப் 2 வெளியாகிறது. குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் முதல் முறையாக வெளியாகும் தமிழ்ப் படம் கேஜிஎஃப் 2தான்.

ஐரோப்பாவில் மட்டும் 28-க்கும் அதிகமான நாடுகளில் இந்தப் படம் வெளியாகிறது. இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் அதிக அரங்குகளில் கேஜிஎஃப் 2 வெளியாகிறது.

ஐரோப்பா தவிர்த்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் மிக அதிக அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. உலகம் முழுவதும் மொத்தம் 7000 அரங்குகளில் கேஜிஎஃப் 2 வெளியாகிறது.

ரூ100 கோடி செலவில் உருவாக்ககப்பட்டுள்ள இந்தப் படம், வெளியாகும் முதல் நாளன்றே ரூ 100 கோடிக்கும் மேல் வசூலைக் குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

KGF 2USAYashகேஜிஎஃப் 2. யஷ்
Comments (0)
Add Comment