சாருகேசி பட விமர்சனம்

கர்நாடக இசை மேதை ஒருவரின் வீட்டில் நடக்கும் பிரச்சினைகள், ஏற்படும் சிக்கல்கள் அவற்றிலிருந்து அந்தக் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதை வைத்து பின்னப்பட்ட கதை இந்த சாருகேசி.

ஒய் ஜி மகேந்திரன் குழு பலமுறை மேடை ஏற்றிய நாடகம்தான், அதே பெயரில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் படமாக வந்திருக்கிறது.

சிந்து பைரவி ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி காட்சிகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதா என்பதுதான் கேள்வி

இசை மேதையாக ஒய் ஜி மகேந்திரன். அவரது இணையாக சுகாசினி. இந்த இருவர் நடிப்பையும் ரசிப்பவர்களுக்கு படம் பிடிக்கக் கூடும்..

குடும்பத்துக்குள் பிரச்சினை ஏற்படக் காரணமான மகன் – மருமகளாக வரும் ராஜ் அய்யப்பன் – ரம்யா பாண்டியன் நடிப்பு ஓகே ரகம்.

சாருகேசியின் புலம்பல்களை கேட்டு ஆறுதல் சொல்லும் தலைவாசல் விஜய், கவுரவ வேடத்தில் வரும் சமுத்திரக்கனி, கடவுளா அசரீரியா en சொல்ல முடியாத சத்யராஜ் என நிறைய பேர் வந்து போகிறார்கள்.

தொழில்நுட்ப ரீதியாக விடக் ஒன்றுமில்லை. தேவாவின் இசை பரவாயில்லை. அந்த கிளைமேக்ஸ் பாடல் கேட்க வைக்கிறது.

வசனங்கள், காட்சி அமைப்புகளில் பல இடங்களில் சாருகேசி நாடகத்தனம்!

நேரமும் விருப்பமும் நிறைய இருப்பவர்களுக்க படம்!

Charukesi Movie Reviewசாருகேசி விமர்சனம்
Comments (0)
Add Comment