யு ஐ பட விமர்சனம்

வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து தந்த உபேந்திரா, ஒரு இடைவெளிக்குப் பிறகு இயக்கி நடித்திருக்கும் படம் யு ஐ. அதாவது உலகளாவிய நுண்ணறிவு.

‘புத்திசாலியாக இருந்தால், படம் தொடங்குவதற்கு முன் தியேட்டரை விட்டு வெளியேறிவிடுங்கள்’ என்று அறிவிதுவிட்டுத்தான் படத்தை தொடங்குகிறார் உப்பி.

கதைப்படி அவர் ஒரு திரைப்பட இயக்கநர்.
அவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை திரையரங்குகளில் பார்க்கும் சிலர் பித்துப் பிடித்தது போல் ஆகிறார்கள். அந்தப் படத்தை ஒரு தரப்பு கொண்டாட, மற்றொரு தரப்பினர் தடை செய்ய வேண்டும் என்று போராடுகிறார்கள்.

பிரபல திரைப்பட விமர்சகர் அந்தப் படத்தை நான்கு முறை பார்த்த பிறகும் விமர்சனம் எழுத முடியாமல் தடுமாறுகிறார். இதனால், அந்தப் படம் குறித்து ஆய்வு மேற்கொள்ள படத்தை இயக்கிய உபேந்திராவையே தேடிச் செல்கிறார்.

அதில் அவர் கண்டுபிடித்தது என்ன என்பதுதான் மீதி.

சத்யா மற்றும் கல்கி பகவான் என இரு வேடங்களில் உபேந்திரா. சத்யா மென்மையானவர். கல்கி அதிரடி.

இரண்டு வேடங்களிலும் பொருத்தமாக நடித்து தன்னை நிரூபித்திருக்கிறார் உபேந்திரா.

நாயகியாக வரும் ரீஷ்மா ரசிகர்களை குளிர்விக்கிறார்.

திரைப்பட விமர்சகர் நடித்துள்ள முரளி சர்மா, உபேந்திராவின் தந்தையாக வரும் அச்யுத் குமார் உள்ளிட்டோர் நிறைவான நடிப்பைத் தந்துள்ளனர்.

அஜ்னீஸின் இசை ஜனரஞ்சகமாக உள்ளது.

எச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தை வித்தியாசமாகக் காட்டுகின்றன.

நாட்டின் இன்றைய அவலங்களை சரியாகப் பேசியிருக்கிறார் உபேந்திரா. குறிப்பாக கடவுள் நடக்கும் வெறுப்பு மற்றும் பிளவு அரசியல்.

அதற்காகவே இந்தப் படத்தை கட்டாயம் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும்

Rating: 3.5 / 5.0

UI movie ReviewUpendraஉபேந்திறாயு ஐ பட விமர்சனம்
Comments (0)
Add Comment