ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் தேர்தல்: அமீரகம் உள்ளிட்ட 5 நாடுகள் உறுப்பினராக தேர்வு

நியூயார்க்: ஐ.நா. சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு கவுன்சில் ஐ.நா.வின் முதன்மையான அமைப்புகளில் ஒன்றாகும். இது உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது, பன்னாட்டு தடைகளை ஏற்படுத்துவது மற்றும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பினர் நாடுகள் உள்ளன. அதேபோல நிரந்தமில்லாமல் 2 ஆண்டுகள் செயலாற்றக்கூடிய 5 உறுப்பினர் நாடுகளும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

அமீரகம் தேர்வு

இந்தநிலையில், 2022 முதல் 2023-ம் ஆண்டு வரை பணியாற்றும் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் நாடுகளுக்கான தேர்தல் நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அமீரகத்துக்கான ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர் லனா நுசைபா இந்த வாக்குப்பதிவில் கலந்துகொண்டு அமீரகம் சார்பில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இறுதியில் அறிவிக்கப்பட்ட முடிவுகளில், அமீரகம், அல்பேனியா, பிரேசில், கானா மற்றும் கபான் ஆகிய 5 நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் நாடுகளாக தேர்வு செய்யப்பட்டன. இதில் அமீரகம் பெற்ற வாக்குகள் 179 ஆகும். இந்த நிரந்தரமில்லா பாதுகாப்பு கவுன்சில் அமைப்பில் அமீரகம் முதல் முறையாக கடந்த 1986 முதல் 1987-ம் ஆண்டு வரை உறுப்பினர் நாடாக இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்த அந்தஸ்த்தை 2-வது முறையாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

UAEUN Cecurity CouncilUNOஅமீரகம்ஐநா பாதுகாப்பு கவுன்சில்
Comments (0)
Add Comment