சூர்யா நடிப்பில் 5 மொழிகளில் இன்று முதல் ‘ஜெய் பீம்’!

டிகர் சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இன்று வெளியானது.

அமேசான் ப்ரைம் வீடியோவில் இன்று காலை வெளியாகி பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் இப்படம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் 1990களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெய் பீம். நீதிபதி சந்துருவின் வழக்காடு பயணத்தில் இருந்து நிறையவே ஈர்க்கப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கறிஞராக, நீதிபதியாக நீதியரசர் சந்துரு தனது கடமையைச் செய்ய, நீதியை நிலைநாட்ட, தன் கடமையைத் தாண்டியும் எப்படியெல்லாம் போராடினார் என்பதற்கான சாட்சி ‘ஜெய் பீம்’.

படம் இன்று காலை வெளியானதிலிருந்தே ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த மாதிரி ஒரு படத்தில் நடித்ததற்காக சூர்யாவை ரசிகர்களும், பொதுமக்களும் உச்சி முகர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின்ராஜ் எடிட்டராகவும், கலை இயக்குநராக கதிரும் பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படம் நவம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பிராந்தியங்களில் வெளியாகியுள்ளது.

Comments (0)
Add Comment