சிவகார்த்திகேயனின் அயலான்… முன்னோட்டப் படம் எப்படி?

 

ர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய படம் அயலான். இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசரின் தொடக்கத்தில் ‘பருவநிலை மாற்றம்’ குறித்து காட்சி இடம்பெறுகிறது. அடுத்து பறக்கும் தட்டு, ஏலியன் என தமிழ் சினிமாவில் அரிதாகக் காட்டப்பட்ட விண்வெளிக் காட்சிகள் வருகின்றன. டீசரின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு ரொம்பவே மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. ஏலியன் வடிவமைப்பும் கவனம் பெறுகிறது.

ரகுமானின் பின்னணி இசை டீசருக்கு இன்னும் அழுத்தம் சேர்க்கிறது.

இந்த டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் அரங்கில் நடந்து. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், “அயலான்’ படம் தீபாவளிக்கு வருவதாக சொல்லி இருந்தோம். ஆனால், சிஜி பணிகளுக்கு இன்னும் சில காலம் இருந்தால் இன்னும் சிறப்பாக புதிய விஷயங்களை சேர்க்கலாம் என சிஜி பணிகள் செய்யும் நிறுவனத்திடம் இருந்து வேண்டுகோள் வந்தது. அதனால், பொங்கலுக்கு வெளியீட்டை மாற்றினோம். நீங்கள் தற்போது டீசரில் பார்க்கும் ஏலியன் வேர்ல்ட் இப்போது உருவாக்கியது. தீபாவளியை விட பொங்கல் விடுமுறை இன்னும் சிறப்பாக உள்ளது.

இந்தப் படத்துக்காக ஐந்து வருடங்களுக்கு முன்னால் ரகுமான் சாருக்கு என்ன சம்பளம் கொடுத்து கமிட் செய்தோமோ அதையே இப்போது வரை ஓகே சொல்லி எங்களுக்காக புதிய டியூன் இப்போது வரை போட்டுக் கொடுத்தார். அது அவருடைய பெருந்தன்மை. டீசர் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார்.

இதேபோன்று ஏலியன், ஸ்பேஸ் ஷிப் வைத்து இதற்கு முன்பு எம்.ஜி.ஆர். ஒரு படம் முயற்சி செய்தார். அதற்கு பிறகு நீங்கள்தான் என சொன்னார்கள். அதனால், எம்.ஜி.ஆர்.க்கு அப்புறம் சிவகார்த்திகேயன்தான் என யூடியூப் தலைப்பு வைத்து விடாதீர்கள். அதுபோன்ற கன்செப்ட் என்றுதான் சொன்னேன். படத்தில் 4600 வி.எஃப்.எக்ஸ் ஷாட்ஸ் உள்ளது. இந்தப் படத்தின் மொத்த டெக்னீஷியன்ஸூம் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள். சிஜி கம்பெனி அம்பத்தூரில்தான் உள்ளது. இதற்கு வெளிநாடு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தப் படம் முடித்தவுடன் நானும் ரவிக்குமாரும் சேர்ந்து இன்னொரு படம் செய்கிறோம். ஒருக்கட்டத்தில் படத்திற்கு நிதி தேவை என்ற நிலை வந்தபோது, நான் சம்பளம் வேண்டாம், படம் சிறப்பாக வர வேண்டும் என்று சொன்னேன். ரவிக்குமாரின் நேர்மைக்காக அவர் ஜெயிப்பார். இதுபோன்ற சிறந்த வி.எஃப்.எக்ஸ்ஸோடு சிறந்த படம் இந்தியாவில் இல்லை என்பதை நம்பிக்கையோடு சொல்வேன். ’அயலான்’ படத்தைக் குடும்பத்தோடு திரையரங்குகளில் பொங்கலுக்கு போய் பார்க்கலாம்,” என்றார்.

அயலான் டீசர்:

Ayalaan Teasersivakarthikeyanஅயலான்சிவகார்த்திகேயன்
Comments (0)
Add Comment