தமிழ் ஓடிடி தளங்களில் பல வெற்றிப் படைப்புகளை தந்து வரும் ஜீ5-ன், அடுத்த படைப்பாக வெளிவருகிறது ‘செங்களம்’ இணையத் தொடர். அபி & அபி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.
இத்தொடரின் முன்னோட்டம் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் ஜீ5 நிறுவன அதிகாரிகள் சிஜு பிரபாகரன், கௌசிக் நரசிம்மன், இசையமைப்பாளர் தரண், ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன், எடிட்டர் டான் பாஸ்கோ, நடிகர்கள் டேனியல், பிரேம், கண்ணன், நடிகைகள் வாணி போஜன், ஷாலி, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், தொடரின் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசுகையில், “இயக்குநர் அமீரை இரண்டு நாளுக்கு முன்புதான் அழைத்தேன். அவர் வந்திருந்து எங்களை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. என் முதல் படம் சுந்தரபாண்டியனுக்கு இருந்த அதே உணர்வில்தான் உங்கள் முன், இந்த முதல் வெப் தொடருக்காக நிற்கிறேன். இணையத் தொடர் பண்ண முதலில் எனக்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் ஜீ5 ஊக்கப்படுத்தினார்கள், அவர்களால்தான் இந்தப்படைப்பு உருவானது. அவர்களுக்கு என் நன்றிகள். இந்த தொடர் ஒரு அரசியல் திரில்லர். உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் தரும்,” என்றார்.
இயக்குநர் அமீர் பேசியதாவது:
“இந்த படைப்பில் வேலை பார்த்துள்ள பலரும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள், எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளார்கள். இந்த டிர பார்த்தபோது, இப்படி ஒரு கதையை நாம் செய்திருக்கலாமே என்று எனக்குப் பொறாமை ஏற்பட்டது. ஒரு கலைஞனுக்கு மற்றொரு கலைஞனின் படைப்பைப் பார்த்து இப்படி பொறாமை ஏற்பட்டாலே, அது நல்ல படைப்பாகத்தான் இருக்கும். அந்த வகையில் எஸ் ஆர் பிரபாகரன் இப்போதே ஜெயித்து விட்டார். இந்த முன்னோட்டப் படத்தில் முதலில் என்னைக் கவர்ந்தது இசைதான். காட்சிகள் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளனர். ஜீ 5 தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தந்து வருகிறார்கள் அவர்களுக்கு இந்த செங்களம் தொடரும் வெற்றிப்படைப்பாக அமையும்,” என்றார்.
‘செங்களம்’ இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது.
நடிகர்கள்:
வாணி போஜன், கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி பைரவி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேலா ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல் அன்னி போப், அர்ஜய், பவன், பிரேம், கஜராஜ், பூஜா வைத்தியநாதன்.
தொழில் நுட்ப குழு:
இயக்கம் மற்றும் திரைக்கதை: எஸ்.ஆர்.பிரபாகரன்
தயாரிப்பு: அபினேஷ் இளங்கோவன் (Abi & Abi Entertainment PVT LTD)
இணை தயாரிப்பு – இர்பான் மாலிக்
இசை: தரண்
எடிட்டிங்: பிஜு. V. டான் போஸ்கோ
ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்