50 மில்லியன்… தலைமைச் செயலகம் சாதனை!

ந்தியாவின் முன்னணி ஒளிபரப்பு தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜீ 5 தளத்தில், சமீபத்தில் வெளியான ‘தலைமைச் செயலகம்’ தொடர், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனைப் படைத்துள்ளது.

தமிழக அரசியல் களப் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரில்லர் சீரிஸான “தலைமைச் செயலகம்” இணையத் தொடர் கடந்த மே 17ஆம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியானது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியா வொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் வெளிவந்த “தலைமைச் செயலகம்” தொடர், தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான அரசியல் தொடராக உருவாகியுள்ளது. 8 அத்தியாயங்கள் கொண்ட இத் தொடரில் முன்னணி நட்சத்திர நடிகர்களான கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப் பிணைந்த தமிழக அரசியலின் கதையைப் பரபரப்பாகச் சொல்கிறது இந்தத் தொடர்.

நாடெங்கும் தேர்தல் சூடு பறக்கும் இந்த சூழ்நிலையில், ரசிகர்களுக்கு சரியான தீனியாக வெளியாகியுள்ள இந்தத் தொடர், பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. நடிப்பு, இசை, உருவாக்கம், இயக்கம் எனத் தொழில்நுட்ப ரீதியில் அட்டகாசமான தொடராக விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

“தலைமைச் செயலகம்” தொடர், கடந்த மே 17 ஆம் தேதி வெளியான நிலையில், மிகக் குறுகிய காலத்தில், 50 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்தத் தொடர் விமர்சகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, திரைப்பிரபலங்களிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இந்தத் தொடர் குறித்து
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதிதனது சமூக வலைத்தள பக்கத்தில் இத் தொடரைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

பதைபதைக்க வைக்கும் சஸ்பென்ஸ், சூழ்ச்சி மற்றும் சிலிர்க்க வைக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் ‘தலைமைச் செயலகம்’ தொடரை ZEE5 இல் பார்க்கலாம்.

Thalaimai Seyalagam web seriesVasantha Balanதலைமைச் செயலகம்வசந்த பாலன்
Comments (0)
Add Comment