வீட்டுக்கு அழைத்துப் பாராட்டிய ரஜினி.. நெகிழ்ந்த டிராகன் படக்குழு!

மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, டிராகன் படத்தால் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கல்லூரியில் ஒழுங்காகப் படிக்காத நாயகன் குறுக்கு வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதை கேள்வி கேட்கும்படியான படமாக டிராகன் உருவாகியிருந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆ ச்சர்யப்பட வைத்துள்ளது.

சாதாரண கமர்சியல் படம் என்பதைத் தாண்டி, திரை எழுத்தாகவும் பலரின் உணர்வுகளைத் தொட்டதால் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு பாராட்டுகள் கிடைத்தன.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டிற்கே அழைத்து அஸ்வத்தை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அஸ்வத், “அற்புதமா எழுதியிருக்கீங்கன்னு ரஜினி சார் பாராட்டினார். நல்ல படம் பண்ணனும், படத்தைப் பார்த்துட்டு ரஜினி சார் நம்மளை வீட்டுக்குக் கூப்பிட்டு பேசணும்.. இதெல்லாம் இயக்குநர் ஆகணும்னு உழைக்கிற பல உதவி இயக்குநர்களோட கனவு. கனவு நிறைவேறிய நாள் இன்று,” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாள்களாக நல்ல படங்களை ஆதரித்து பதிவிடுவதுடன் தொடர்புடைய இயக்குநர் மற்றும் நடிகரை நேரில் அழைத்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

DragonPradeep Ranganathanrajinikanthடிராகன்ரஜினிகாந்த்
Comments (0)
Add Comment