அப்போ கும்கி யானை… இப்போ மம்போ சிங்கம்… பிரபு சாலமனின் புதிய படம்!

மைனா, கும்கி, கயல் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் பிரபு சாலமன். தனித்துவமான கதைக் கருவை எடுத்துக்கொண்டு அதில் காதலைப் பேசுவது இவர் பாணி.

இவர் இயக்கத்தில் வெளியான மைனா மற்றும் கும்கி ஆகிய படங்கள் பெரிய வசூல் வெற்றியையும் பெற்றன.

ஆனால் சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

இந்நிலையில் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிங்கத்திற்கும், சிறுவனுக்கும் இடையேயான உறவை விவரிக்கும் விதமாக அமைந்துள்ள இந்தப் படத்திற்கு மம்போ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக உண்மையான சிங்கத்தை வைத்து எடுக்கப்படும் முதல் ஆசிய திரைப்படம் இதுதான் என்ற அறிவிப்போடு, இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்றத்தை வெளியாகியுள்ளனர்.

கும்கி படத்தில் யானையை வைத்து படத்தை உருவாக்கியவர் இம்முறை சிங்கத்தை மையக் கருவாகியுள்ளார்.

மம்போ படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். பெரும் இடைவெளிக்குப் பிறகு ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் இப்படத்தை தயாரிக்கிறார். நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் விஜய்ஸ்ரீ ஹரி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.


பிரபு சாலமனின் மகள் ஹேசல் ஷைனி இப்படத்தில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

https://www.instagram.com/p/C91h3fUoVIW/?igsh=a2xkcjlrMHR1MTR2

MamboPrabhu Solomonபிரபு சாலமன்மம்போ
Comments (0)
Add Comment