பிதா… மண் சார்ந்த ஒரு த்ரில்லர் திரைப்படம்!

 

மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் பிதா படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பேசுகையில், “திரைத்துறை சார்ந்து பெரிய அறிமுகம் இல்லை. மண் சார்ந்து ஒரு படமெடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். டிரெய்லரில் பிரபாகரன் அய்யா படம் பார்த்த போது ஒரு நம்பிக்கை வந்தது. சமூக அக்கறையோடு இயங்கக் கூடிய நாயகனை மதி முன்னிறுத்துகிறார். முதல் படம் போல் தோன்றவில்லை. வாழ்த்துக்கள். இயக்குநர் கார்த்திக்குமார் நேர்த்தியாகப் படத்தை எடுத்துள்ளது போல் இருக்கிறது. நல்ல படைப்பாக இருக்குமென்று நம்புகிறேன். ஈழத்தினை பற்றிப் பேசும்போது மனதில் பெரும் வலி இருக்கிறது. இங்கு ஈழத்திற்காக போராடிய அண்ணன் பிரபாகரன் பெயரைக்கூடச் சொல்ல முடியாத நிலை நிலவுகிறது.  அதைப்பற்றிப் பேசவே பயப்படும் காலத்தில், ஒரு படைப்பைத் தர முயலும் இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள்,” என்றார்.

மற்றொரு சிறப்பு விருந்தினர் நாஞ்சில் சம்பத் பேசுகையில், “நண்பர் தம்பி கார்த்திக் குமாருக்கு என் வாழ்த்துக்கள். நான் வாழ்ந்த ஊரைச் சார்ந்தவன் தம்பி கார்த்திக். ஒரு அதிர்வை உண்டாக்கும் படைப்பைத் தம்பி செய்கிறான் என்பது மகிழ்ச்சி. இன்றைய காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பல படங்கள் திரைக்கு வரவில்லை. பல படங்கள் சென்சார் பிரச்சனைகளில் சிக்கி முடங்கிக் கிடக்கிறது.  நான் நடித்த ஒரு படத்தின் பெயர் சேகுவாரா. அதில் என் பெயர் அண்ணாதுரை அந்தப்பெயர் வரக்கூடாதென்கிறார்கள். சினிமா என்பது சதுப்புநிலம். அதை அணுகுவது கடினம். நான் சினிமாக்காரன் இல்லை நான் இருக்கும் இடத்தில் இருக்கும் அரசியலை விட இங்கு அதிக அரசியல் இருக்கிறது. அந்த களத்தில் தம்பி கார்த்திக் ஒரு நல்ல படைப்பைத் தர முயற்சிக்கிறார். அவர் முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும். ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படைப்பாளியாக கார்த்திக் குமார் வருவார். 11 படங்களைத் தயாரித்த மதியழகன் இப்படத்தில் நடிகராக மாறியுள்ளார். இந்தக்கூட்டணி வெல்வதற்கு என் வாழ்த்துக்கள்,” என்றார்.

படத்தின் இயக்குநர் கார்த்திக் குமார் பேசுகையில், “எனது தயாரிப்பாளர் பால சுப்ரமணியன் அவர்களுக்கும், சதீஷ் அவர்களுக்கும் முதல் நன்றி. சாமானியன் திரைக்கதையை அவர்களிடம் சொன்னபோது, கேட்டவுடனே அந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து, உடனே அதைத் தயாரித்தார்கள். அதேபோல் இந்தக் கதையின் மீதும் நம்பிக்கை வைத்து, தயாரித்து இருக்கிறார்கள் மிக்க நன்றி. அவர்கள் தந்த வாய்ப்புதான் இந்த மேடையில்  நான் நிற்கக் காரணம், நடிகராக இந்த படத்தில் மதியழகன் சார் அறிமுகமாகிறார். அவர் மனதளவில் மிக அழகானவர், அவர் எங்கேயும் பேச மாட்டார் இந்த மேடையில்தான் முதல் முறையாகப் பேசியுள்ளார். மிக அமைதியானவர் ஒரு சிறு தொழிலைப் பார்த்தாலே பலர் வேறு துறைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் மதியழகன் பத்து பன்னிரண்டு படங்களைத் தாண்டி திரைத்துறை தான் வேண்டும் என்று நிமிர்ந்து நிற்கிறார் தொடர்ந்து படங்கள் செய்கிறார் இப்படத்தில் முழு நடிகராக வருகிறார். அவரிடம் பயங்கரமான திறமை இருக்கிறது, அது இந்த திரைப்படத்தில் முழுமையாக வெளிப்படும், இந்தப் படத்திற்காக மதி சார் ரொம்பவும் மெனக்கெட்டுள்ளார். இதுவரை சொல்லாத புதிய விஷயத்தைச் சொல்ல முயற்சித்துள்ளோம் உங்கள் ஆதரவைத் தாருங்கள்,” என்றார்.

தயாரிப்பாளர் வி மதி பேசுகையில், “இது வித்தியாசமான தருணம், நான் நடிகனாக அறிமுகமாகும் முதல் மேடை , இந்த மாதத்திலேயே தயாரிப்பாளராக நான்கைந்து படங்களுக்கு இந்த மேடைக்கு வந்திருக்கிறேன் இப்பொழுது நடிகனாக உங்கள் முன்னால் வந்திருக்கிறேன்.  உங்கள் முழு ஆதரவினை தர வேண்டுகிறேன், நீங்கள் எப்போதும் எனக்கு நல்ல ஆதரவைத் தந்து வந்திருக்கிறீர்கள் ஆனாலும் கடைசி படம் பெரிய அளவில் செல்லவில்லை, இருந்தும் ராமராஜன் சார் அவர்களை நடிக்க வைத்த பெருமை கிடைத்தது சந்தோஷம். இப்படத்தில் ஈழம், மேதகு பிரபாகரன் போன்ற விஷயங்களைப் பரபரப்புக்காகப் பயன்படுத்தவில்லை அவர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை மிகவும் உண்மையாக ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம். இதுவரை இல்லாத வகையில் மிக வித்தியாசமான படைப்பாக இந்த படம் இருக்கும், உங்கள் அனைவர் ஆதரவையும்  தாருங்கள்,” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குநர்கள் சரண், சரவணன் சுப்பையா, கே ஆர் வெங்கடேஷ், பாபி மாஸ்டர், நடிகர்கள் குணா, மணிகண்டன், சூப்பர் குட் சுப்பிரமணி, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

தொழில் நுட்பக் குழு:

எழுத்து இயக்கம் : வி கார்த்திக் குமார்
தயாரிப்பாளர்: டி பால சுப்ரமணி, சி சதீஷ் குமார்
பேனர்: ஸ்ரீனிக் தயாரிப்பு
கிரியேட்டிவ் ஹெட்: ஸ்ரீதா ராவ்
இசை: ரஷாந்த் அர்வின்
ஒளிப்பதிவாளர்: பிராங்க்ளின் ரிச்சர்ட்
எடிட்டர் & கலரிஸ்ட் : MS.பாரதி
பாடல் வரிகள் – மதன் கார்க்கி, விவேக், விஜேபி ரகுபதி
வணிக நிர்வாகி: உமாபதி ராஜா
கலை இயக்குநர்: சரவணன் மாரியப்பன்
ஸ்டண்ட் டைரக்டர்: கனல் கண்ணன், ஸ்டன்னர் சாம்
ஆடை வடிவமைப்பாளர் – பவித்ரா சதீஷ்
ஆடை: SP சுகுமார்
ஒப்பனை: ரஷ்யா
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

PithaV Mathiபிதாமதியழகன்
Comments (0)
Add Comment