பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’… காதலே அரசியல்!

பெரும் வரவேற்பு பெற்ற சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கி வரும் புதிய படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்தப் படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஷபீர், ஹரி, தாமு, வின்சு, வினோத், சுபத்ரா, உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு -கிஷோர்,
இசை -டென்மா,
படத்தொகுப்பு- செல்வா ஆர்கே,
கலை ரகு,
நடனம் -சாண்டி,
சண்டை- ஸ்டன்னர் சாம்,
உடைகள் – அனிதா ரஞ்சித், ஏகாம்பரம்
பாடல்கள் – உமாதேவி, அறிவு.

முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம்.
காதலை இங்கு அரசியலாக பார்க்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசி வாழும் மனிதர்கள் மத்தியில் காதலை கொண்டாடும் விதமாக எதற்குள்ளும் அடைபடாத அதன் பரிபூரணத்தை சொல்லுகிற படமாக இருக்கும்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது. ‘Love is Political’ எனக்குறிப்பிட்டு இந்த முதல் தோற்ற வடிவமைப்பை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் பா ரஞ்சித்.

Natchathiram NagargirathuPa Ranjithநட்சத்திரம் நகர்கிறதுபா ரஞ்சித்
Comments (0)
Add Comment