புதுமுகங்கள் நடிப்பில் புதிய ரொமான்ஸ் காமெடி படம்!

நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் ஆகியோர் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார்கள். என்என் பிக்சர்ஸ் சார்பில் இவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடந்தது. படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, பிவிஆர் மீனா, திவோ தலைமை அதிகாரி விசு ஆகியோருடன், ‘4யு’ கம்பெனி நிறுவனர் ஆர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொள்ள, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

பூஜை முடிந்த பிறகு படக்குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படம் குறித்த செய்திகளை கேட்டறிந்த நடிகர் சந்தானம், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்கள் வருவது அரிதாகிவிட்டது, அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் முழுக்க முழுக்க இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இப்படம் உருவாகவுள்ளது.

நடிகர் மைக்செட் ஶ்ரீராம் இப்படம் கதை நாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். படத்தில் நடிக்கும் மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களுக்காக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தற்போது இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தினை இயக்குநர் விவேக் எழுதி இயக்குகிறார். அருள்ராஜ் கென்னடி இசையமைக்க, முத்து மூவேந்தர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

New Romcom moviesanthanamசந்தானம்புதிய பட பூஜை
Comments (0)
Add Comment