‘காட்டுல… காட்டுல…’ அருண் விஜய் – ஹரியின் யானை புதிய வீடியோ!

ருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து பின்னணியில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படம் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘யானை’ படத்தின் புதிய விளம்பர வீடியோ வெளியாகி தீப்பரவலாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

 

அருண் விஜய் – ஹரியின் யானை புதிய வீடியோ!

Arun VijayDirector HariYaanaiஅருண் விஜய்யானைஹரி
Comments (0)
Add Comment