அபிஷேக் பிக்சர்ஸ், தண்டர் ஸ்டுடியோவுடன் இணைந்து, அபிஷேக் நாமா இயக்கத்தில் ‘நாகபந்தம்’, பான் இந்தியத் திரைப்படத்தை உருவாக்குகிறது.
கூத்தாச்சாரி மற்றும் டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட் போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் அபிஷேக் நாமா.
இயக்குநராக டெவில் மூலம் தனது திறமையால் அனைவரையும் கவர்ந்த அபிஷேக் நாமா இந்த பிரம்மாண்டமான படத்தில் ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தவுள்ளார். அபிஷேக் நாமா, ஆன்மீக மற்றும் சாகசங்கள் நிறைந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளார். தேவன்ஷ் நாமா இப்படத்தை வழங்குகிறார், தேவ் பாபு காந்தி (புஜ்ஜி) இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
உகாதி திருநாளில், இந்த பிரம்மாண்டமான முயற்சியின் தலைப்பை ஒரு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்திற்கு நாகபந்தம் – தி சீக்ரெட் ட்ரெஷர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கேஜிஎஃப் புகழ் அவினாஷ் நடிப்பில், மர்மமான அகோரி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் இந்த வீடியோ ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது. இ இயக்குநர் அபிஷேக் நாமா மற்றும் தயாரிப்பாளர் மதுசூதன் ராவ் தலைமையில், அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு பணியாற்றுவதால், இந்த மிகப்பிரம்மாண்ட திரைப்படம், மாயாஜாலம், மர்மம் மற்றும் சாகச உலகிற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் என நம்பலாம்.
இப்படத்திற்கு சௌந்தர்ராஜன் எஸ் ஒளிப்பசதிவாளராகவும்,, அபே இசை அமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். காந்தி நதிகுடிகார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
நாகபந்தம் ஒரு பான் இந்தியா திரைப்படமாகும், இது 2025 ஆம் ஆண்டில், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும்.
முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில்நுட்பக் குழு:
பேனர்: அபிஷேக் பிக்சர்ஸ்
இணை தயாரிப்பு : தண்டர் ஸ்டுடியோஸ்
வழங்குபவர்- தேவன்ஷ் நாமா
கதை, திரைக்கதை, & இயக்கம் : அபிஷேக் நாமா
தயாரிப்பாளர்: மதுசூதன் ராவ்
ஒளிப்பதிவு : சௌந்தர் ராஜன் S
இசை: அபே
இணை தயாரிப்பாளர்: தேவ் பாபு காந்தி (புஜ்ஜி)
CEO : வாசு பொதினி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : காந்தி நதிகுடிகர்
வசனங்கள் : ஸ்ரீகாந்த் விசா
எடிட்டர் : சந்தோஷ் காமிரெட்டி
நிர்வாக தயாரிப்பாளர் : அபிநேத்ரி ஜக்கல்
ஆக்சன் : வெங்கட்
டால்பி அட்மாஸ் மிக்சிங்க் : E.ராதாகிருஷ்ணா டி.எஃப். தொழில்நுட்பம்
சிறப்பு விளைவுகள்: J.R.எத்திராஜ்
திரைக்கதை உருவாக்கம்: ராஜீவ் N கிருஷ்ணா
VFX : தண்டர் ஸ்டுடியோஸ்
விளம்பர வடிவமைப்புகள்: கானி ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு – சதீஷ்குமார்