ரஜினி மகள் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா?

 

ஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனைத் தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன் பிறகு அவர் படங்கள் இயக்கவில்லை.

ஐஸ்வர்யா, கடந்த ஜனவரி மாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக அறிவித்தார். அதன்பின் பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கினார். அந்த வீடியோவுக்குபரவலாக வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ‘ஓ சாதி சால்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தித் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இளையராஜாவை நேரில் சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். இளையராஜாவை வெகுவாகப் புகழ்ந்து பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா, ‘பணிநிமித்த நேரம் ஆரம்பம்’ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவின் இந்த ட்விட்டுக்கு பதிலளிக்கும் விதமாக தனது பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் இளையராஜா:

“ஐஸ்வர்யாவுடன் நேரம் செலவிட்டதில் மகிழ்ச்சி. ஒருவர் வாழ்க்கையில் பல நிகழ்வுகள் நடக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் மாறாதது. அது அன்பு. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்கரள்.  எல்லாம் மாறும்… அன்பு மட்டுமே மாறாதது”, என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Aishwarya RajinikanthIlaiyaraajaஇளையராஜாஐஸ்வர்யா ரஜினிகாந்த்
Comments (0)
Add Comment