மாவீரனுக்கு தடையில்லை!

சென்னை: இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாக உள்ளது.

‘மாவீரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படத்துக்கு எதிராக ஐஜேகே கட்சியின் பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன் தொடர்ந்த வழக்கில் ‘மாவீரன்’ படத்தை வெளியிட தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என 40 வினாடிகளுக்கு பொறுப்புத் துறப்பு போட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், ஐஜேகே கொடியைப் பிரதிபலிக்காதவாறு, காட்சிகளை மாற்றியமைத்த பின்னரே ஓடிடி, சாட்டிலைட் சேனல்களில் வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

high CourtMaaveeransivakarthikeyanமாவீரன்வழக்கு
Comments (0)
Add Comment