சென்னை: கொரோனா பாதிப்பால் கடந்த 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த மாநாடு படம், தீபாவளி க்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் ரஜினியின் அண்ணாத்த படமும் அன்றே வெளியானதால், படத்தை நவம்பர் 25க்கு தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
படத்தின் பாடல்கள் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்திய சுரேஷ் காமாட்சி, நவம்பர் 25ம் தேதி படத்தை வெளியிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். உலக அளவில் 600க்கும் அதிகமான அரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் அதிக அரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டன.
நாளை உலகெங்கும் படம் வெளியாகவிருந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு, படத்தை வெளியிட முடியவில்லை என்பதை மிகுந்த வலியோடு தெரிவிப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் சுரேஷ் காமாட்சி.
இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாநாடு வெளியாகாமல் போனதற்கு காரணம் என்ன என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
சிம்பு வின் முந்திய படங்களில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் அவர் தொடர்பான நிதிப் பிரச்சினைகளே இந்த இழுபறிக்குக் காரணம் என்கிறார்கள். அந்த பழைய கணக்குகளை முழுவதுமாகத் தீர்க்காமல் படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது மல்லுகட்டுகிறது ஒரு தரப்பு.
தடுப்பூசி போடாதவர்களுக்கு தியேட்டர்களில் அனுமதி இல்லை என்ற தமிழக அரசின் அறிவிப்பும் ஒரு காரணம் என்கிறார்கள்.
தயாரிப்பாளர் மனம் திறந்தால் உண்மை தெரிந்துவிடும்.