லவ் டுடே இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த்!

 

சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லவ் டுடே’. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், லவ் டுடே படத்தின் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டி, வாழ்த்தினார்.

இதுகுறித்து பிரதீப் ரங்கநாதன் டுவிட்டர் பதிவில், “இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது. மிகவும் சூடாக இருக்கிறது. இறுக்கமான அரவணைப்பு, அந்த கண்கள், சிரிப்பு, நடை மற்றும் அன்பு. என்ன ஒரு ஆளுமை. சூப்பர் ஸ்டார் ராஜினிகாந்த் லவ் டுடே பார்த்து என்னை வாழ்த்தினார். நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் மறக்க மாட்டேன் சார்,” என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Love TodayPradeep Ranganathanrajinikanthபிரதீப் ரங்கநாதன்ரஜினிகாந்த்லவ் டுடே
Comments (0)
Add Comment