தலைவர் 169… அப்போ அதெல்லாம் நிசந்தானா!!

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம், திரைக்கதைப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தப் படத்தை இயக்குபவர் நெல்சன். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் பீஸ்ட். படத்துக்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனம் காரணமாக படம் படுதோல்வியைச் சந்தித்தது.

இதனால் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைக்காது என்றும், வேறு இயக்குநர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்பட்ட நிலையில், ரஜினியே நெல்சனை வீட்டுக்கு அழைத்து தைரியம் சொல்லி அனுப்பியது நடந்தது. அப்போது திரைக்கதையை இன்னும் கச்சிதமாக வடிவமைக்கச் சொல்லி அனுப்பி வைத்தாராம் ரஜினி.

இந்த நிலையில், படத்தின் கதை திரைக்கதை வசனத்தை செப்பனிடும் பணிக்காக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அழைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கசிந்தன. ஆனால் அது உண்மையில்லை என்றும் அப்படி ஒருவேளை ரவிக்குமாரை உள்ளே நுழைத்தால் நெல்சன் விலகிவிடுவார் என்றும் சிலர் கூறி வந்தனர்.

இதில் ஒருபாதி உண்மை ஆகிவிட்டது. கதை திரைக்கதையை சரி செய்வதற்காக கேஎஸ் ரவிக்குமார் அழைக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். நெல்சனுடன் இணைந்து இந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம் அமைப்பார் ரவிக்குமார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

KS RavikumarrajinikanthThalaivar 169கேஎஸ் ரவிக்குமார்தலைவர் 169ரஜினிகாந்த்
Comments (0)
Add Comment