ஜீவி 2 பட விமர்சனம்

டிகர்கள்: வெற்றி, அஸ்வினி, முபஷ்ஷிர்

ஒளிப்பதிவு: பிரவீண் குமார்

இசை: கேஎஸ் சுந்தரமூர்த்தி

தயாரிப்பு: வி ஹவுஸ் புரொடக்ஷன் சுரேஷ் காமாட்சி

இயக்கம்: விஜே கோபிநாத்

2019ல் வித்தியாசமான கதையுடன் வெளியாகி அனைவரையும் கவனிக்க வைத்த படம் ஜீவி. மூன்றாண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தின் கதைக்கு பொருத்தமான கதைக் களத்துடன் இரண்டாம் பாகத்தை எடுத்து ஜீவி 2 என வெளியிட்டிருக்கிறார்கள்.

எங்கோ யாருக்கோ நடக்கும் சில நிகழ்வுகள், அதற்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒருவருக்கும் திரும்பவும் அதேபோல நடக்கிறது.. ஆனால் இந்த இரு நிகழ்வுகளுக்கு ஒரு தொடர்பு இருக்கிறது என்ற முக்கோணவியல் விதியை மையப்படுத்தி முதல் பாகம் உருவாக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது பாகத்தில், ஆட்டோ ஓட்டுநர் வெற்றி… அவர் மனைவி அஸ்வினி. மனைவியின் மருத்துவச் செலவைச் சமாளிக்க கார் ஒன்றை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கு பெரும் பணம் தேவைப்பட, அப்போது பார்த்து அவரது கார் பழுதாக, மனைவியின் சொத்து கடனில் முழுக, அக்கா மகள் நோயில் விழுவது என பிரச்சினை மேல் பிரச்சினை. அப்போதுதான் புதிதாக அறிமுகமாகும் பணக்காரர் முபஷ்ஷிர் வீட்டில் திருடத் திட்டமிடுகிறார், நண்பன் கருணாகரன் துணையுடன். திட்டமிட்டபடி அவர் பணத்தைத் திருடி பிரச்சினைகளிலிருந்து மீள்கிறாரா என்பது மீதி.

 

8 தோட்டாக்கள், ஜீவி, ஜோதி வரிசையில் நாயகன் வெற்றிக்கு இன்னுமொரு பெயர் சொல்லும் படம் ஜீவி 2. இயல்பாக நடித்திருக்கிறார்.

பார்வையற்ற மனைவியாக வரும் அஸ்வினி, தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நண்பனாக வரும் கருணாகரனும் குறை வைக்கவில்லை.

முபஷ்ஷிர், ரோகிணி, ரமா, மைம் கோபி. ஜவஹர் நாசர் என நடிகர்கள் அனைவருமே பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

முதல்பாகத்தை பார்க்காதவர்களுக்கு வசதியாக, இந்தப் படத்தில் அதன் கதைச் சுருக்கத்தைத் தந்திருப்பது நல்ல உத்தி.

சுந்தரமூர்த்தியின் இசை, பிரவீண் குமாரின் ஒளிப்பதிவு இரண்டுமே படத்துக்கு கூடுதல் பலம்.

முதல் பாதியில் விறுவிறுப்பாக போகும் படம், க்ளைமாக்ஸ் நெருங்குகையில் கொஞ்சம் தடுமாறுகிறது. மற்றபடி சுவாரஸ்யமான ஒரு அனுபவம் ஜீவி 2. படத்தை ஓடிடியில் வெளியிட்டிருப்பது தயாரிப்பாளரின் புத்திசாலித்தனம்.

Rating: 3.5/5.0

Jiivi 2 movie reviewSuresh Kamatchivetriசுரேஷ் காமாட்சிஜீவி 2
Comments (0)
Add Comment