ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் எப்போதுமே தயார்! – கமல் ஹாஸன்

கமல் ஹாஸன், பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா நடிப்பில் உருவான விக்ரம் படம் கடந்த வாரம் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்றுள்ளது.

‘விக்ரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல் ஹாஸன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அதில் ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், “ரஜினியுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினியிடம் கூற வேண்டும். பின்னர் லோகேஷ்யிடம் கூற வேண்டும். நாங்கள் மூன்று பேரும் பேசிய பின்னரே உங்களிடம் கூற முடியும். ரஜினியுடன் இணைந்து நடிக்க நான் எப்போதுமே தயாராக இருக்கிறேன்,” என்றார்.

உண்மையில் விக்ரம் படத்துக்கு முன்பு ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தைத்தான் லோகேஷ் இயக்குவதாக இருந்தார். கமல் ஹாஸன் தயாரித்து சிறப்பு வேடத்தில் நடிக்க, ரஜினி அதில் நாயகனாக நடிக்கவிருந்தார். ஆனால் அண்ணாத்த படம் முடியும் தருவாயில் ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் அந்தப் படம் படம் கைவிடப்பட்டு, விக்ரம் உருவானது குறிப்பிடத்தக்கது.

Kamalrajinikanthvikramகமல்ரஜினிவிக்ரம் படம்
Comments (0)
Add Comment