டபுள் ஆக்குபன்சி (Double Occupancy) விமர்சனம்

ஒரு உடம்பில் இரு உயிர்கள்.. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், இரவு முழுக்க ஆணாகவும் மாறிவிடும் வினோத உடல் அமைப்பு.

இவருக்கும் ஒரே பெயர். ரஜினி. பெண் ரஜினியை பகலில் வினோத் காதலிக்க, ஆண் ரஜினியை இரவில் காதலிக்கிறார் சம்யுக்தா. Oru கட்டத்தில் ரஜினி என்பவர் ஒரே உடல்தான் என்பது தெரிய வருகிறது. எப்படி சிக்கல் தீர்கிறது என்பது கிளைமேக்ஸ்.

தமிழுக்கு வித்தியாசம் கதை. ஆனால் சினிமாவில் ஏற்கெனவே முயற்சித்துப் பார்த்ததுதான்.

குழப்பமான கதை என்றாலும் அதை முடிந்தவரை, சினிமா சமரசங்களோடு தெளிவாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஸ்வின் கந்தசாமி.

ரஜினி என்ற பாத்திரம் வரும் சந்தோஷ் மற்றும் ரேஷ்மா வெங்கடேஷ் நன்றாகவே செய்துள்ளார்கள். இவர்களைக் காதலிக்கும் வினோத் கிஷன் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

அதி உச்ச கற்பனை (Fantacy) வகை கதை என்பதால் காரண காரியங்களை ரொம்ப ஆராயத் தேவையில்லாமல் போகிறது.

விடிவி கணேஷ் காட்சிகளை சற்று கலகலப்பாக கொண்டு போகிறார். பக்ஸ் பாத்திரத்தை இன்னும் நன்றாக உருவாக்கி இருக்கலாம்.

சாம் சி எஸ் இசை படத்துக்கு பலம். குறிப்பாக பின்னணி இசை. நெருடலான சில காட்சிகளைக் கூட ஏற்க வைக்கும் இசை.

சாந்தகுமார் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவு மற்றும் பிரவீன் ஆண்டனி எடிட்டிங் படத்தை ரசிக்க உதவுகின்றன.

நிச்சயம் ஒருமுறை பார்க்கக் கூடிய வித்தியாசமா படம்.

Double Occupancy Reviewடபுள் ஆக்குபன்சி விமர்சனம்
Comments (0)
Add Comment