இயக்குநர் ராம் – சுரேஷ் காமாட்சி – நிவின் பாலி கூட்டணியின் புதுப்படத் தலைப்பு நாளை அறிவிப்பு!

யக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

‘மாநாடு’ படத்தின் மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், 7வது படம் இது.

கதாநாயகியாக அஞ்சலி நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்றது.

சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் கலை இயக்குநர் உமேஷ் ஜே.குமார் கைவண்ணத்தில் மிகப் பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பை அக்டோபர் 11-ம் தேதி மதியம் 12 மணிக்கு (நாளை) வெளியாகும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

Director RamSuresh Kamatchiசுரேஷ் காமாட்சிநிவின் பாலிராம்
Comments (0)
Add Comment