எச்சரிக்கை… ‘டெவில்’ இசையமைப்பாளரானார் இயக்குநர் மிஷ்கின்!

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர் ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். படத்தின் மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார். மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த S.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் செய்கிறார்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, தனிச்சிறப்பான செய்தி, இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் மிஷ்கின். இதற்கு முன் படங்களில் சில பாடல்கள் எழுதியுள்ளார் மிஷ்கின். பாடியும் உள்ளார். இளையராஜா அல்லாத பிற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றும்போது தன் பட பின்னணி இசையிலும் அவர் பங்கேற்பது வழக்கம். அந்த அனுபவத்தில் தற்போது டெவில் திரைப்படத்திற்கு நான்கு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். விரைவில் பாடல் வெளியீடு நடக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Devil movieDirector Mysskinஇசையமைப்பாளர் மிஷ்கின்இயக்குநர் மிஷ்கின்டெவில்
Comments (0)
Add Comment