பிரேசில்: ஒரே நாளில் 85,149 பேருக்கு புதிதாக கொரோனா!

பிரேசிலியா: உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதைத் தொடர்ந்து 3வது இடத்தில் தென் அமெரிக்க நாடான பிரேசில் உள்ளது. கொரோனாவின் 2 அலைகளாலும் பிரேசில் மக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரேசில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரேசிலில் இதுவரை பதிவு செய்யப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,72,96,118 ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயம் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,216 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,84,235 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பிரேசிலில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆரம்பத்திலேயே தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தவறியதாக அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

BrazilCovid 19கொரோனா தொற்றுபிரேசில்
Comments (0)
Add Comment