டொரன்டோ: கனடாவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 477பேர் பாதிக்கப்பட்டதோடு 30பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23 ஆவது நாடாக உள்ளது கனடா. இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 98ஆயிரத்து 275பேர் இங்கு கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 25,873 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 19,255 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 795 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி செலுத்துவதில் அந்நாட்டு அரசு தீவிகர கவனம் செலுத்தி வருகிறது.