கலகத் தலைவன் படம் பார்த்து உதயநிதியைப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் – நிதி அகர்வால் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன்.

உலகெங்கும் இந்தப் படம் இன்று (நவம்பர் 18) வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி முதல்வர் முக ஸ்டாலினுக்காக திரையிடப்பட்டது. படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் நேற்று பார்த்தார் முதல்வர்.

திரைப்படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக கலகத் தலைவன் திரைப்படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் முதல்வர்.

முதல்வர் ஸ்டாலின் படம் பார்த்து வாழ்த்தியதும் பாராட்டியதும் படக் குழுவினரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது.

Kalaga Thalaivanmk stalinudhayanidhiஉதயநிதிகலகத் தலைவன்முக ஸ்டாலின்
Comments (0)
Add Comment