தல-ன்னு என்னை அழைக்காதீங்க! – அஜித் அவசர அறிக்கை

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பில் இருந்து இன்று அறிக்கை வெளியானது.

அஜித் சார்பில் அவரது மேலாளரும் பிஆர்ஓவுமான சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அந்த அறிக்கை:

“இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம்,” என்று அஜித் அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

Ajith KumarThalaஅஜித் குமார்தலவலிமை
Comments (0)
Add Comment