விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த ஆண்டு நிகழ்ச்சியின் 8ஆம் பதிப்பு ஒளிபரப்பாக உள்ள நிலையில், நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல் ஹாசன் திடீரென அறிவித்தார். இது பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதே நேரம், சமூக ஊடக பயனர்கள் பலரும் கமல் விலகியதை வரவேற்றுள்ளனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்திய கமலுக்குக் கிடைத்த வரவேற்பு, கடந்த இரு பருவங்களில் (seasons) கிடைக்கவில்லை.

அவர் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் திரைப்படப் அணிகள் இருப்பதால், பிக் பாஸ் 8ல் பங்கேற்கவில்லை என கமல் அறிவித்துவிட்டார்.

அவர் விலகியதை பெரும்பாலான வலைதள அயன்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளனர்

கடந்த 7 ஆண்டுகளாக நிகழ்ச்சி நடத்தி, அதனை மிகவும் வெற்றிகரமான ஒன்றாக மாற்றிய கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளது விஜய் டிவி நிர்வாகம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *