சன்னி லியோன் கலந்து கொண்ட ’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

2

அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேசப் புகழ் சன்னி லியோன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் காயத்ரி சுரேஷ், “எனக்கு தயாரிப்பாளராக வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. மல்டி ஸ்டார்ஸ் படம் என்றால் நிறைய பிரச்சினைகள் வரும் என்று நினைத்தோம். ஆனால், அதெல்லாம் இல்லாமல் ப்ரியாமணி, சன்னி லியோன், அக்‌ஷயா என எல்லோருமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். எல்லோருக்கும் நன்றி”, என்றார்.

நடிகை சன்னி லியோன் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. என்னைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இந்தப் படம் நிச்சயம் மாற்றும். படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்,” என்றார்.


இயக்குநர் விவேக்குமார் கண்ணன் பேசுகையில், “முதலில் ப்ரியாமணியை வைத்துதான் படத்தை ஆரம்பித்தோம். அடுத்து ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் என அடுத்தடுத்து வந்தார்கள். காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவது எளிதான விஷயம் கிடையாது. கேமரா மேன், ஸ்டண்ட் மாஸ்டர், மேக்கப் ஆர்டிஸ்ட் என எல்லோருமே சிறப்பாக பணி செய்தார்கள். ப்ரியாமணி, சன்னி லியோன், ஜாக்கி ஷெராப், அக்‌ஷயா என எல்லோருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பேபி சாராவுக்கு சிறப்பான கதாபாத்திரம் படத்தில் இருக்கிறது. தியேட்டரில் உங்களுக்கு அந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்றுதான் நிறைய வேலை பார்த்திருக்கிறோம். படம் ஜூலையில் பாருங்கள்,” என்றார்.

நிகழ்ச்சியில், ஸ்டண்ட் மாஸ்டர் ஓம் பிரகாஷ், மேக்கப் ஆர்டிஸ்ட் தசரதன், எடிட்டர் வெங்கட்ராமன், ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாதன், நடிகை அக்சயா, பாடலாசிரியர் அருண் பாரதி, நடிகர்கள் பிரதீப், அசோக், இணைத் தயாரிப்பாளர் விவேகானந்தன் ஆகியோரும் பேசினர்.