கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று!

3
  1. சென்னை:  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பிய தனக்கு லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    அவரது ட்விட்டர் பதிவு:

     

    கொரோனா தொற்று பாதித்துள்ள கமல் ஹாசன் தற்போது போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

    அவரை தமிழ் நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் ட்விட்டரில் நலம் விசாரித்தார்.